Saturday, October 27, 2012

BABA

வாழ்வில்  பிறருக்கு உபயோகமாக ,நேர்மையாக  நடந்துகொள் .முதியவர் ,

,குழந்தைகள்  மீது  அன்பாக  இரு . தாய்  தந்தையருக்கு  சேவை  செய் .

கோபத்தை  தியாகம்  செய் .ஆணவம்  கை விடு .பணிவும்  விவேகமும் 

கொண்டிரு .
                                                                       \ஷிர்டிபாபா

                                                [குமுதம் ]11-5-2011
                                                                                       

Tuesday, July 17, 2012

arivu

பழி  வாங்கும்  எண்ணம்  பாதுகாப்பின்மையை  ஏற்படு த்தி  விடும்  என்பது


பலருக்கும்  தெரிவதில்லை .

ஆத்திரம்  வரும்  நேரத்தில்   ஒரு  நிமிடம்  அறிவுக்கு  வேலை  கொடுத்தால்

போதும்  .எந்தப்  பிரச்சினையும்  நெருங்காது .

                                                 தென்கச்சி  கோ  சாமிநாதன்

vendam

நேற்றைய   சோம்பல்

இன்றைய   தாமதம்

இன்றைய  தாமதம்

நாளைய   தோல்வி

நாளைய   தோல்வி

எதிர்கால   வேதனை                                    மாணவர்   முரசு

                                                       திருமதி  ஹபிபா  ஹமீது   [ஆசிரியை ]

                                                                         சொங் பூ  தொடக்கப்பள்ளி
                                                           
                                                                                    சிங்கப்பூர்

                                                                 
                                                                  

Saturday, July 7, 2012

ponmozi

நீ  எதுவாக  நினைக்கிறாயோ  அதுவாகவே   ஆவாய்

                                              விவேகானந்தர்   பொன் மொழி

                                 ஆனந்த விகடன் [23-5-12]

kalvi

சும்மாவே  என்   தாத்தா   'கல்விதான்  நம்  சொத்து 'என்று 

சொல்லிக்கொண்டே  இருப்பார்  ."நேற்றுவரை  இவர்  பணக்காரராக

இருந்தார்  :இன்று  ஏழையாக  ஆகிவிட்டார்  என்று  ஒருவரைப்  பார்த்து

சொல்லலாம்  .ஆனால்  ,இவர்  நேற்றுவரை   எம்..எஸ்சி  படித்திருந்தார் .

காலம்  செய்த  கோலம் , பாவம்..இன்று  வெறும்  எஸ்..எஸ்..எல்..சி  ஆகி -

விட்டார் என்று  நம்மால்  எவரையும்  பார்த்து  சொல்ல முடியாது .ஆகவே

கல்வியின்  சிறப்பு  அழிவில்லாதது ..."என்றெல்லாம்  விளக்குவார் 

                                                                சிறுகதை

                            கனவுகளின்   மதிப்பெண்  [ஷங்கர் பாபு]]

                                  ஆனந்த விகடன் [23-5-12]

                                         

Thursday, April 5, 2012

கிருஷ்ண லீலையில்   காலியன்   என்ற  100   தலைப்  பாம்பை  வதம்  செய்து 

கண்ணன்   ஆடிய   நடனம்  'காலியன்  நர்த்தனம்  ' எனப்படும்  .'காளிங்க 

நர்த்தனம் ' என்பது  தவறு  .தகவல்  கொடுத்தது  நடிகை   சுகன்யா 

                                                                                                          குமுதம்  28 -12 -2011

Monday, April 2, 2012

கோயில்  வாசலில்  நீங்கள்  செருப்பை  மட்டும்  கழட்டிவிட்டுப்  போகாதிர்கள்  .

கூடவே  மனதிற்குள்  இருக்கும்  அழுக்கையும் கோபம் ,போட்டி  ,பொறாமை 

போன்ற  கெட்ட குணங்களையும்  கழற்றி  வைத்து விட்டுப்  போங்கள் .யாராவது

திருடிவிட்டுப் போகட்டுமே                 பூதப்பாடி  இராமலிங்கம் 

                                                                                 குமுதம்  21 -12 -2011 

Friday, March 9, 2012

ஒன்றைப்  புரிந்துகொள்ளுங்கள்.  மாமியார்  என்றுமே மருமகளுக்கு  அம்மா 

ஆக  முடியாது.  அதேபோல்  ,மருமகளும்  மகள்  ஆக  முடியாது.  அம்மா- மகள்

உறவு  அன்பானது. மாமியார்-  மருமகள்  நட்பாக  மட்டுமே   இ  ருக்க முடியும். 

அம்மா-மகளுக்கு  இடையே எந்த  எல்லைக் கோடுகளும்  கிடையாது.!ஆனால்

மாமியாருக்கும்  மருமகளுக்கும்  நடுவே  எல்லைக்  கோடுகள் உள்ளன.  நட்பு 

நீடிக்க ,மனம்  திறந்து  பேசிப்பாருங்கள்  .  

                                                                                     விசாலாட்சி பாலகிருஷ்ணன்

                                                                                                      சென்னை  24
அவள் விகடன்
 ஏப்ரல் 8 --2005 

Thursday, March 8, 2012

நான்  சிறுவனாக  இருந்தபோது  இந்த  உலகை

மாற்ற ஆசைப்பட்டேன்  . நடக்கவில்லை 

இளைஞன்  ஆனபோது ஊரைத்திருத்த   முனைந்தேன்

முடியவில்லை 

குடும்பத்  தலைவன் ஆனபோது  குடும்பத்தையாவது 

திருத்த  விழைந்தேன்  .இயலவில்லை  .

தந்தை ஆனபோது  பிள்ளைகளை  மாற்றி விடவேண்டும்  என்று துடித்தேன்

அவர்கள் என் பேச்சை கேட்கவில்லை 

மரணப்படுக்கையில்தான்  எனக்குப் புரிந்தது 

இவ்வளவு  முயற்சிகள் செய்ததிற்கு  பதிலாக 

நான் கொஞ்சம் மாறியிருக்கலாம் என்று

ஆனால் நேரம்  கடந்து விட்டது !                                                                                   

                                                                                    நீயும் நானும் 

                                                                  கோபிநாத்    [ஆனந்த விகடன்  ]  8 -9 -2010